ICTA பணிப்பாளர்கள் மீள் நியமனம்
05 Jun 2018
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும், பதினைந்து வருட கால வரலாறு கண்ட தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையயத்தின் பணிப்பாளர்கள் மீள் நியமிக்கப்பட்டனர். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையயத்தின் முன்னால் பணிப்பாளர் நாயகமாகக் கடைமை புரிந்த பேராசிரியர். ரொஹான் சமரஜீவ, ICTA யின் தலைவராகப் பதவி ஏற்றுள்ளார். இவர் ICTA யின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராக சேவை புரிந்து இ-ஸ்ரீலங்கா திட்டத்தின் வடிவமைப்புக்குப் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சபை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பத்தின் பிரதான பயன்களான கணினி மென்பொருள், வணிகச் செயல் அயலாக்கம் (BPO), தொலைதொடர்பாடல், இணையப் பாதுகாப்பு மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை பிரதிநிதிப் படுத்தியுள்ளது.
சபை நியமிக்கப்பட்டு ஒரு வார காலத்தில் இச்சபையானது மெய்யார்வத்தோடு ICTA இன் செயற்பாடுகளை மீள்பார்வை செய்ததாக, ICTA யின் தலைவர் பேராசிரியர். ரொஹான் சமரஜீவ குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ICTA இன் பல் வகைச் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்த திட்டமொன்று உருவாக்கப் படுகின்றது என்றும் கூறினார். இதன் முக்கிய நோக்கம், ICTA இன் உந்து வேகத்தை மீளக்கட்டியெழுப்பி அரசாங்க, தனியார் மற்றும் பொதுஜன சமூகங்களுடன் ICTA யின் முக்கிய பங்காகிய டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுப்பதாகும். இதன் மூலம் அரசாங்கத்தின் திறனாக்கம், மாறும் பொருளாதாரம் மற்றும் முழுமையான சமுகம் ஆகியவற்றுக்குப் பங்களிப்புசெய்வதாகும். மேலும் ICTA யின் புதிய பணிப்பாளர்கள் சபையின் தலைமைத்துவம் மற்றும் அலுவலர்களின் அர்பணிப்பு மூலம் ICTA மீண்டும் ஒரு நம்பகமானதொரு இடத்தைப் பிடிக்குமென ICTA இன் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.